Tnpsc, Tnusrb, rrb, tet





07 April 2022 - Thursday



Important Notes for TNPSC Group Exams




Tnpsc, Tnusrb, RRB, TET Group exams

TN SCERT Geography Important Notes

GEOGRAPHY


1. The lithosphere is the solid outer part of the earth புவியின் திடமான மேற்பரப்பு நில கோளமாகும்


2. The lithosphere of mercury Venus Mars are much thicker and more rigid than that of Earth புதன் வெள்ளி மற்றும் செவ்வாய் கோள்களின் நிலக்கோளம் புவியின் பாறை கோலத்தை விட தடிமனாகவும் கடினமாகவும் உள்ளது


3. The deepest place ever reached by human till 2011 was Kola Super Hole (12262m) in Murmansk, Russia 2011 வரை உலகிலேயே மிக ஆழமான பகுதி ரஷ்யாவின் மர்மான்ஸ்க் இல் உள்ள சூப்பர் கோல் (12262m )ஆகும்


4. In 2012 the deepest place ever reached by human was Z-44 Chavyo well (12376 m) which is 15 times the height of Burj Khalifa in Dubai 2012இல் Z- 44 சாவியோ கிணறு (ரஷ்யா)(12376 m) மிக ஆழமான பகுதி என்ற அந்தஸ்தைப் பெற்று இருக்கிறது .இது துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபா விட 15 மடங்கு பெரியது


5. There are many specimens of magnificent rock-cut architecture in India like the Ajanta and Ellora caves in Maharashtra, the Aihole and Badami temples in Karnataka the Konark Temple in Odisha and Mamallapuram in Tamilnadu பாறைகளைக் குடைந்து உருவாக்கப்பட்ட கட்டிடக் கலைச்சான்றுகள் இந்தியாவில் ஏராளமாக உள்ளன .மகாராஷ்டிராவில் உள்ள அஜந்தா மற்றும் எல்லோரா குகைகள், கர்நாடகாவில் உள்ள ஐஹோல், பதாமி கோவில்கள், ஒடிசாவில் உள்ள கோனார்க் கோவில் தமிழ்நாட்டில் உள்ள மாமல்லபுரம் கோவில் இதற்கு சான்றுகளாகும்


6.C.F.Ritcher devised a scale to measure the magnitude of earthquakes in which the scale relates energy released at the epicenter and provides an estimation of the severity of an earthquake C.F.ரிக்டர் என்பவர் புவி அதிர்வு அளவையை கண்டுபிடித்தார் இந்த அளவை புவிமேல் மையத்திலிருந்து வெளிப்படும் சக்தியையும் புவி அதிர்வின் தீவிரத்தையும் அறிந்துகொள்ள உதவுகிறது


7. Tsunami was the result of the Indio- Austrian plate subducting below The Eurasian plate இந்தோ ஆஸ்திரேலிய தட்டு யுரேசிய தட்டின் கீழே அமைந்ததே சுனாமிக்கு காரணமாகும்


8. Tsunami was caused by an earthquake measuring an magnitude of above 9 in the Richter scale சுனாமி ரிக்டர் அளவையில் 9 ஆக பதிவானது


9. The highest magnitude ever recorded in 9.5 on richter scale was in bio -bio Chile in 1960 சிலி நாட்டில் 1960ஆம் ஆண்டு பயோ என்ற இடத்தில் ரிக்டர் அளவையில் 9.5 பதிவானது அதிர்ச்சியே மிக உயர்ந்த பதிவாக கருதப்படுகிறது


10. The term volcano is the derived from the Latin word vulcan which is the name of Roman God of fire வல்கனோ என்ற சொல் இலத்தீன் மொழியில் உள்ள வல்கேன் என்ற சொல்லாகும் .இது ரோமானிய நெருப்பு கடவுளின் பெயராகும்


11. Pacific ring of fire is the most seismically and volcanically active நில அதிர்வுகளும் எரிமலை வெடிப்பும் மிக அதிக அளவில் பசிபிக் நெருப்பு வளையத்தில் காணப்படுகின்றன


12. Outer core layer is made up of liquid iron புவியின் உள் உருகிய இரும்பை கொண்ட அடுக்கை வெளிக்கரு என்று அழைக்கின்றோம்


13. In the ancient period Gondwana land mod towards north direction ஆதியில் கோண்டுவானா நிலப்பகுதி வடக்கு நோக்கி நகர்ந்தது


14. The point of origin of an earthquake is called the focus/hypocenter புவி அதிர்வு உருவாகும் புள்ளி கீழ் மையம் என்று அழைக்கப்படுகிறது


15. The moment of plates the creates stress and tension in the rocks causing them to stretch and cracks result in earthquake புவித்தட்டுகள் நகர்வதால் ஏற்படும் அழுத்தம் மற்றும் இறுக்கத்தின் காரணமாக ஏற்படும் விரிசல் புவி அதிர்ச்சி எனப்படும்


16. The highest waterfalls in the world Angel falls in Venezuela of 979 m உலகிலேயே மிக அதிக உயரமான நீர்வீழ்ச்சி ஏஞ்சல் நீர்வீழ்ச்சி வெனிசுலா இதன் உயரம் 979 மீட்டர்


17. Lake Kanwar in Bihar is the Asia's largest freshwater oxbow lake பீகாரில் உள்ள கன்வர் ஏரி ஆசியாவில் உள்ள மிகப்பெரிய நன்னீர் குருட்டு ஆறு ஆகும்


18. Sundarban delta formed by the river Ganga Brahmaputra is the largest delta in the world கங்கை பிரம்மபுத்திரா ஆறுகளால் உருவாக்கப்பட்ட டெல்டா சுந்தரவன டெல்டா ஆகும். இது உலகிலேயே மிகப்பெரிய டெல்டாப் பகுதி ஆகும்


19. The world's best known geyser is the old faithful geyser in the Yellowstone National park in Wyoming, USA அமெரிக்காவிலுள்ள வியாமிங்கின் எல்லோ ஸ்டோன் தேசிய பூங்காவில் காணப்படும் ஒல்டு பெய்த்புல் வெப்ப நீரூற்று உலகின் மிகவும் அறியப்பட்ட வெப்ப நீரூற்று ஆகும்


20. The world's deepest sink hole is China at 2172 feet.There are as many as 15000 sinkholes in Illinois உலகின் மிக ஆழமான உறிஞ்சு துளை சீனாவில் 2172 அடி ஆழத்தில் காணப்படும் சைனோசை ஜியாங்காங் ஆகும் .அமெரிக்காவிலுள்ள இலினாய்சில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறிஞ்சு துளைகள் உள்ளன


21. The thickest known deposit of loess is 335 m found in the loess plateau in China சீனாவில் உள்ள காற்றடி வண்டல் பிடபூமி தான் மிக கனமான காற்றடி வண்டல் பதிவாகும். இதன் உயரம் சுமார் 335 மீட்டர் ஆகும்


22. Cave insects loss their centres of site and develop extraordinary long antenna to compensate the loss of site குகைகளில் காணப்படும் பூச்சி இனங்கள் பார்வைத் திறனை இழந்து விடுவதால் அதன் நீளமான உணர்கொம்புகள் பார்வை திறனை ஈடு செய்கின்றன


23. Delta is seen in the lower course of the river டெல்டா ஆற்றின் மூப்பு நிலையில் உருவாகும் நிலத்தோற்றம் ஆகும்


24. Karst topography is formed due to the action of groundwater சுண்ணாம்பு பாறை நிலத்தோற்றங்கள் உருவாவதற்கு காரணம் நிலத்தடி நீர்


25. Stacks or formed by wave erosion கடல் தூண்கள் உருவாவதற்கு காரணம் கடல் அலை அழித்தல்


26. Glacial erosion is responsible for the formation of crique பணியாளரின் அரித்தல் செய்கையினால் சர்க்குகள் உருவாக்கப்படுகின்றன


27. In 1772 CE Daniel Rutherford discovered nitrogen in the atmosphere டேனியல் ரூதர்போர்டு பொ.ஆ 1772 ஆம் ஆண்டு வளிமண்டலத்தில் நைட்ரஜன் வாயு உள்ளது என்பதை கண்டுபிடித்தார் 28. In 1774 Joseph priestley discovered oxygen in the atmosphere 1784 ஆம் ஆண்டு ஜோசப் பிரிஸ்ட்லி ஆக்சிஜன் வளிமண்டலத்தில் உள்ளது என்பதை கண்டுபிடித்தார்


29. Magnetosphere life beyond the exosphere வெளி அடுக்கிற்கு அப்பால் அமைந்துள்ள அடுத்து காந்தக் கோளம் ஆகும்


30. Magnetosphere is the Earth magnetic belt where proton and electrons coming out from the sun or trapped by the earth காந்த மண்டலம் சூரியனிலிருந்து வெளிப்படும் புரோட்டான்கள் மற்றும் எலக்ட்ரான்களை தக்க வைத்துக் கொள்கிறது


31. The magnetic field extends to around 64000 km above the earth புவியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 64 ஆயிரம் கிலோ மீட்டர் வரை காந்த வயல் பரவியுள்ளது


32. Auroras are cosmic glowing lights produced by a stream of electrons discharge from the sun surface due to the magnetic storms that are seen as unique multicolored fireworks hanging in the polar sky during midnight சூரியனின் மேற்பரப்பில் உருவாகும் காந்த புயலின் காரணமாக வெளியேற்றப்படும் மின் அணுக்கள் துருவப் பகுதிகளில் நள்ளிரவு வானத்தில் வானவேடிக்கை போது உருவாகும் பல வண்ண ஒளிச்சிதறல் போன்ற காட்சி தோன்றுகிறது .இதுவே அரோராஸ் எனப்படுகிறது


33. Troposphere is called as whether making layer கீழ் அடுக்கு வானிலையை உருவாக்கும் அடுக்கு என்று அழைக்கப்படுகிறது


34. The wind blows from ocean to land in the afternoon is called sea breeze கடலிலிருந்து காற்று மதிய வேலைகளில் நிலத்தை நோக்கி வீசப்படுவது கடற்காற்று என்று அழைக்கப்படுகிறது


35. The wind blows from land to see during the night is called land breeze நிலத்திலிருந்து காற்று கடல் பகுதியை நோக்கி வீசப்படுவது நிலக்காற்று என அழைக்கப்படுகிறது


36. The windward side receive heavy rainfall while the leeward side receives very less rainfall காற்று மோதும் பக்கம் மழை பொழிவு அதிகமாக கிடைக்கின்றது .காற்று மோதா பக்கம் மழைப் பொழிவு குறைவாக கிடைக்கின்றது


37. The rotation of the earth causes difflection of winds from the original path called the coriolis effect புவியின் சுழற்சி காரணமாக காற்று தான் வீசும் பாதையிலிருந்து விலகி வீசும்.இவ்வாறு காற்று தன் பாதையிலிருந்து விலகி வீசுவதை கொரியலிஸ் விளைவு என்கிறோம்


38. Wins are deflected to the right in the Northern hemisphere and to the left in the southern hemisphere which is known as Ferrels Law வட அரைக்கோளத்தில் வலப்புறமாகவும் தென் அரைக்கோளத்தில் இடப்புறம் ஆகும் காற்று வீசுகின்றன .இதுவே பெரல்ஸ் விதி எனப்படுகிறது


39. A violent cyclone that hit Odisha on Friday, 29th October ,1999 with the speed of 260 kph raged for over 36 hours was one of the strongest storm to hit the Indian coast 1999ஆம் வருடம் அக்டோபர் 29ஆம் நாள் வெள்ளிக்கிழமை அன்று இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் கடற்கரையோரப் பகுதிகளை பெரும் சூறாவளி தாக்கியது. இது இந்திய வரலாற்றிலேயே அதிக வலுவுடன் வீசி மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்திய சூறாவளிஆகும். காற்று 260 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியது


40. Deliberations for naming cyclones in the Indian Ocean region began in 2000 and the formula was agreed upon in 2004 with 8 countries in the region இந்திய பெருங்கடலில் உருவாகும் சூறாவளிக்கு பெயர் சூட்டுவது தொடர்பாக 8 நாடுகள் பொ.ஆ 2000 ஆண்டு ஆலோசனைக் கூட்டம் நடத்தின.பின்னர் 2004 ஆம் ஆண்டு ஒவ்வொரு நாடும் சூறாவளிக்கு பெயர் பட்டியலை கொடுத்தன


41. A front is the boundary separating warm and cold air masses வளி முகம் என்பது வெப்பக்காற்று திறனையும் குளிர்காற்று களையும் பிரிக்கும் எல்லை ஆகும் During sunset cirrus clouds look colourful hence they are called as Mare's Tails சூரிய மறைவின்போது கீற்று மேகங்கள் பல வண்ணத்தில் காட்சி அளிப்பதால் பெண்குதிரை வால்கள் என்று அழைக்கப்படுகிறது


42. The only sphere which contains all clouds in the atmosphere is troposphere வளிமண்டல கீழ் அடுக்கில் மட்டும் தான் அனைத்து வகையான மேகங்களும் காணப்படும்


43. Any thunderstorm which is associated with the fall of hailstones is known as phails from which is one of the most heared whether phenomenon இடியுடன் கூடிய கல்மாரி மழை கல்மாரி புயல் என அழைக்கப்படுகிறது. இது வானிலை நிகழ்வுகளில் மிகவும் அஞ்சத்தக்கதாகும்


44. When the relative humidity of the air is 100% the r is said to be saturated which will not observe anymore water vapour காற்றின் ஒப்பு ஈரப்பதம் 100 சதவீதமாக இருக்கும் போது காற்று பூரித நிலையை அடைகிறது .இந்நிலையில் காற்று நீராவியை உறிஞ்சாது


45. The temperature at which are gets saturated is called dew point காற்று நீராவியாகும் பூரித நிலை பனி விழுநிலை எனப்படுகிறது


46. Humidity of the atmosphere is measured by the wet and dry bulb thermometer also called hygrometer ஈரப்பதத்தை அளப்பதற்கு ஈரப்பதமானி அல்லது ஈர உலர்க்குமிழ் வெப்பமானி பயன்படுத்தப்படுகிறது


47. Absolute humidity is expressed in terms of grams of water vapour present per cubeic metre of air முழுமையான ஈரப்பதம் என்பது ஒவ்வொரு கனமீட்டர் காற்றிலும் எத்தனை கிராம் நீராவி உள்ளது என்பதாகும்


48. relative humidity is expressed in percentage ஒப்பு ஈரப்பதம் என்பது சதவிகிதத்தில் கணக்கிடப்படுகிறது


49. Shillong receives less rainfall which is the same case of Mumbai and Pune ஷில்லாங் மிகக்குறைந்த அளவே மழை பெறுகிறது. இதைப்போன்றே மும்பையும் பூனாவும் அமைந்துள்ளன


50.Ionosphere reflects radio waves அயன அடுக்கு வானொலி அலைகளை பிரதிபலிக்கிறது


51.Alto-cumulus clouds are called sheep clouds இடைப்பட்ட திரள் மேகங்கள் செம்மறி ஆட்டு மேகங்கள் என்று அழைக்கப்படுகிறது


52. The monsoons are periodic winds பருவக்காற்று என்பது கால முறை காற்றுகள்


53. Dew in the form of ice crystals is called Frost பனித்துளி பனிப்படிகமாக இருந்தால் உறைபனி என்று அழைக்கின்றோம்


54. The vertical moment of air is called air current காற்றின் செங்குத்து அசைவினை காற்றோட்டம் என்று அழைக்கின்றோம்


55. Water table is a level below the ground where water is found collector when it the Earth surface நிலத்தின் அடிப்பகுதியில் உள்ள நீரின் மேல் மட்ட நிலையே நிலத்தடி நீர்மட்டம் என்கிறோம்


56. Aquifers are porous rock strata filled with water found below the Earth surface நீர், நீர்கொல்பாறையின் வழியாக ஊடுருவி சென்று நீர் உட்புகாபாறையின் மேல் பகுதியில் தேங்கி நிற்கும் பகுதி நீர்கொள்படுகை என்கிறோம்


57. 71% of the Earth is covered by water புவி 71% நீரால் சூழப்பட்டிருக்கிறது


58.A hypsometric curve is a graphic representation which shows the height of a certain place found on the land under height of ocean features at sea உயரவிளக்கப்படம் என்பது நிலப் பகுதியிலோ அல்லது நீர் பகுதியிலோ காணப்படும் நிலத்தோற்றங்கள் உயரத்தை வரைந்து காட்டும் கோட்பாடாகும்


59.Hypso means height in Greek Hypso என்ற கிரேக்கச் சொல்லின் பொருள் உயரம் என்பதாகும்


60. Oil and natural gas corporation is India's largest oil and Gas exploration and production company எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் இந்தியாவின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு குறித்த ஆய்வுகளையும் உற்பத்திகளை மேற்கொண்டு வரும் மிகப் பெரிய நிறுவனமாகும்


61. Dragon whole is the deepest known underwater sink hole in the world. The local fisherman call it the eye of the South China sea உலகின் மிக ஆழமான கடல் அடி உறிஞ்சிக் துறைக்கு டிராகன் துளை என்ற பெயர். அப்பகுதியில் வாழும் மீனவர்கள் இதனை தென்சீனக் கடலின் கண் என அழைக்கின்றனர்


62. Fathoms is an Nautical measurement of the depth of the water in the ocean கடலின் ஆழத்தை அளவிட கூடிய ஓர் அலகு பாத்தொம்கள் எனப்படும் 63. Isobath is an imaginary line on a map joining the points of equal depth சமஆழக் கோடு என்பது ஒரே அளவிலான ஆழம் கொண்ட இடங்களை வரைபடத்தில் இணைக்கும் கற்பனைக் கோடு


64. Isohaline is an imagery line on a mapining the points of equal salinity in motions சம உவர்பு கோடு என்பது ஒரே அளவிலான உப்புத்தன்மை கொண்ட பகுதிகளை வரைபடத்தில் இணைக்கும் கற்பனைக் கோடு


65. Wave energy power plants have been installed at Vizhinjam in Kerala coast and Andaman and Nicobar Islands of India இந்தியாவில் கேரளக் கடற்கரையில் உள்ள விழிஇஞ்சியம் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அலை ஆற்றல் மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன


66. Potential tidal energy source of India are the gulf of Khambat gulf of Kutch and Sundarbans இந்தியாவில் காம்பே வளைகுடா கட்ச் வளைகுடா மற்றும் சுந்தரவன சதுப்பு நிலப் பகுதிகள் ஓத சக்தி உற்பத்தி செய்ய சாத்தியக்கூறுகள் நிறைந்த மண்டலங்களாக அறியப்பட்டுள்ளன


67. Maritime boundary of most of the countries is fixed to be 12 nautical miles from the baseline which was fixed by the UN convention on the law of the sea 2013 பெரும்பாலான நாடுகளின் கடல் எல்லை என்பது அவற்றின் கடற்கரையில் இருந்து 12 கடல் மைல்கள் என கணக்கிடப்படுகிறது. 2013இல் கடல் சட்டத்தின் மீதான மாநாடு நடைபெற்றபோது ஒவ்வொரு நாட்டிற்குமான கடல் மையில்களை ஐநா சபை நிர்ணயம் செய்தது


68. National institute of oceanography was established in first January 1966 .It's headquarters is located at Dona Paula in Goa தேசிய கடல்சார் நிறுவனம் 01.01.1996நிறுவப்பட்டது இதன் தலைமையகம் கோவாவிலுள்ள டோனா போலா ஆகும்


69. The great barrier reef is the world's largest coral reef system composed of 900 Islands உலகின் மிக நீளமான பவளப்பாறை திட்டு தி கிரேட் பாரியர் ரீப் இப்பவளப்பாறை 900 தீவுகளையும் உள்ளடக்கியது


70. The oceanic ridge comes into existence due to divergence of tectonic plates கடலடி மலைத் தொடர் உருவாக காரணம் புவித்தட்டுகள் விலகுதல்


71. The temperature of the ocean waters generally decreases at greater depth பெருங்கடலின் வெப்பநிலை ஆழத்தை நோக்கிச் செல்லச் செல்ல குறையும்


72. An ecological region that has lost more than 70% of its original habitat is considered as hotspot ஒரு சூழலியல் பிரதேசத்தில் 70% திற்கும் மேலாக ஓரினம் சுயமாக வாழ்விடத்தை இழந்து விடுமேயானால் அவ்விடம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய வளமையங்களாகக் கருதப்படுகிறது 73. Hotspots in India or the Himalayas Western ghats Indo Burma region and sundaland இந்தியாவின் இமயமலைகள் மேற்கு தொடர்ச்சி மலைகள் இந்தோ பர்மா பிரதேசம் சுந்தா நிலப்பகுதி போன்றவை வள மையங்களாகும்


74. There are 34 areas around the world which are qualified as biodiversity hotspot உலகில் முப்பத்தி நான்கு இடங்கள் உயிரினப்பன்மை தகுதி வளமையங்களாகக் கருதப்படுகிறது


75. The US National Cancer institute has identified about 70% of the plants used for the treating of Cancer which are found only in rainforests e.g Lapacho புற்றுநோயை குணப்படுத்த பயன்படுத்தப்படும் தாவரங்களில் சுமார் 70 சதவீத தாவரங்கள் மழைக்காடுகளில் காணப்படுவதாக அமெரிக்க ஐக்கிய நாடுகளில் புற்றுநோய் நிறுவனம் அடையாளம் கண்டுள்ளது எ. கா லப்போச்சா


76. A biosphere reserve is a special ecosystem or specialised environment with flora and fauna that require protection and nurturing. there are 18 biosphere reserves in India உயிர்க்கோள காப்பகங்கள் என்பவை ஒரு சிறப்பு சுற்றுச் சூழ்நிலை மண்டலம் அல்லது தாவரங்கள் மற்றும் விலங்குகளை உள்ளடக்கிய தனித்துவமான பாதுகாக்கப்பட்ட ஒரு பகுதியாகும். இந்தியாவில் பதினெட்டு முக்கியமான உயிர்க்கோளக் காப்பகங்கள் உள்ளன.


77. The coldest biome on Earth is tundra புவியின் குளிர்ச்சியான பல்லுயிர் தொகுதி தூந்திரா


78. The smallest unit of biosphere is ecosystem உயிர் கோளத்தின் மிகச் சிறிய அலகு சூழ்நிலை மண்டலம்


79. Saline and Sandy climatic conditions are xerophytic plants adapted to பாலைவனத் தாவரங்கள் வளரும் சூழல் உவர்ப்பியம் உள்ள மணல் பகுதி


80. The usage of rainforest biomes for large scale agriculture is unsustainable because the soil is poor மழைக்காடுகள் பல்லுயிர் தொகுதி அதிகளவு விவசாயத்திற்கு பயன்படுத்த இயலாததற்கு வளமற்ற மண் காரணம்


81. The Stockholm conference 1972 declared man as both the creator and moulder of his environment 1972ஆம் ஆண்டு ஸ்டாக்ஹோம் மாநாட்டில் மனிதன் சுற்றுச் சூழலை உருவாக்கி வடிவமைக்கிறான் என அறிவிக்கப்பட்டது


82. The Earth summit formally known as the United Nations conference on environment and development was held in Rio de Janeiro in 1992 ரியோடி ஜெனிரோ நகரில் 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற புவி உச்சி மாநாடு ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி மாநாடு என்று அழைக்கப்படுகிறது


83. In ancient Greek Demos means people and graphis means study of measurement so demography is the statistical study of human population பழங்காலத்தில் கிரேக்க மொழியில் demos என்றால் மக்கள் என்றும் graphis என்றால் கணக்கிடுதல் என்றும் பொருள் ஆகும் .எனவே மக்கள்தொகையியல் என்பது புள்ளியியல் முறையில் மக்கள் தொகையை கணக்கிடுவது ஆகும்


84. In India first census was carried out in the year 1872 இந்தியாவில் 1872 ஆம் ஆண்டு முதன் முதலாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது


85. The first known census was Undertaker nearly 6000 years ago by the Babylonians in 3800 BC உலகின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பாபிலோனில் கி.மு 3800இல் நடந்தது


86. Census have been conducted regularly every 10th year since 1881 1881 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பட்டு வருகிறது


87. The black death is estimated to have killed 30 to 60% of Europe total population during the 14th century பதினான்காம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் பிளேக் என்ற கொள்ளை நோயினால் 30 முதல் 60 சதவீதம் மக்கள் இறந்தனர் என கணக்கிடப்பட்டுள்ளது


88. Black death attributed to the outbreak of plague 89. The World population day is observed on 11th July every year உலக மக்கள்தொகை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11-ஆம் நாள் கொண்டாடப்படுகிறது


90. The United Nations development programmes started celebrating World population day from the year 1989 ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்ட அமைப்பு உலக மக்கள் தொகை தினத்தை 1989ஆம் ஆண்டு முதல் கொண்டாடி வருகிறது


91. India has an official population policy implemented in 1952 . India was the first country to announce such a policy 1952 இல் இந்திய அரசின் அதிகார பூர்வமான மக்கள்தொகை கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டது. இதுபோன்றதொரு கொள்கையை முதன் முதலில் அறிவித்த நாடு இந்தியா ஆகும்


92. All external influences and factors that affect the growth and development of living organisms is environment வாழும் உயிரினங்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை பாதிக்கக்கூடிய காரணிகள் மற்றும் அனைத்து வெளிப்புறச் செல்வாக்குகளை சுற்றுச்சூழல் என்கிறோம்


93. The secondary sector of the economy produces finished goods from raw materials பொருளாதார நடவடிக்கையில் இரண்டாம் நிலை தொழில் மூலப் பொருளிலிருந்து உற்பத்தி செய்யப்படுவன முடிக்கப்பட்ட பொருள்கள்


94. Denmark was the first country in the modern world to conduct a census நவீன உலகில் மக்கள் தொகை கணக்கெடுப்பை முதன் முதலில் நடத்திய நாடு டென்மார்க் ஆகும்


95. The mainland of India extends from 8 °4' North to 37°6' North latitude and from 68 ° 7' East to 97 °25' East longitude இந்தியாவில் முதன்மை நிலப்பரப்பின் அட்ச தீர்க்க பரவல் 8°4' வ to 37°6' வ அட்சம் வரை, 68 ° 7' கி முதல் 97 °25' கி தீர்க்கம் வரை உள்ளது


96. The actual shape of the earth is termed geiod which is an oblate spheroid புவியின் உண்மையான வடிவம் ஜியாய்டு எனப்படுகிறது.இது ஒரு நீள்வட்ட கோளமாகும்


97.The azimuthal polar projection is depicted on the United Nations flag ஐக்கிய நாடுகள் சபையின் கொடியில் சமதள துருவக் சட்டம் சித்தரிக்கப்பட்டுள்ளது 98.Felix Nadar a French photographer was the first to take aerial photographs in 1858 பெலிக்ஸ் நடார், பிரெஞ்சு புகைப்படக்காரர் 1858 ஆம் ஆண்டில் முதல் முதலாக வான்வழி புகைப்படங்களை எடுத்த நபர் ஆவார்


99. Title indicates the purpose or theme of the map ஒரு நில வரைபடத்தின் கருத்து அல்லது நோக்கத்தை குறிப்பிடுவது தலைப்பு


100. Standard symbols that are used in maths to convey a definite meaning or call conventional signs and symbols நில வரைபடத்தில் உறுதியான கருத்தை வெளிப்படுத்துவதற்கு பயன்படும் நிறங்கள் குறியீடுகள் முறை குறியீடுகள்


101. GPS consist of a constellation of 24 satellites உலக அமைவிடத்தை கண்டறியும் தொகுதியில் பயன்படுத்தப்படும் செயற்கைக்கோள்கள் 24


102. When you happened to see a firebreak out you will make a call to 112 தீ விபத்து ஏற்படும் போது நீங்கள் அழைக்கும் எண் 112


103. Drop cover hold the mock drill A vowel for earthquake விழு மூடிக்கொள் பிடித்துக் கொள் என்பது நிலநடுக்கம் ஒத்திகை