Tnpsc group 2 translation





TNPSC COACHING CENTRE IN SALEM - 21 Jan 2022 Friday



ஆங்கில உரையாடல் - அதிலென்ன தவறுகள்? - 2 : முகமெல்லாம் சிரிப்பு!

Tnpsc குரூப் 2 தேர்வில் மொழிபெயர்ப்பு முதன்மை தேர்வு (mains exam)




  • முதன் முறை சந்திக்கும் ராகவன், கார்த்திக் ஆகியோர் இடையே நடைபெற்ற உரையாடல் இது.
  • கார்த்திக் - May I know your name?
    ராகவ் - I am Raghav. What is your name?
    கார்த்திக் - Karthik. Are you also in nineth standard?
    ராகவ் - No. I am eighth standard.
    கார்த்திக் - Why is your face full of smile?
    ராகவ் - I have passed out in my examination. That is why I am very happy. (ஒரு சாக்லெட் பாக்கெட்டை நீட்டியபடி) Please take as much chocolates as you like.

 

  • மேலே உள்ள உரையாடலைப் படித்தபோது உங்களுக்கு அதில் ஏதாவது தவறாகத் தெரிந்ததா? அந்த உரையாடலை எப்படி மேம்படுத்த முடியும் என்பதையும் யோசியுங்கள்.

 

  • மேற்படி உரையாடலிலுள்ள தவறுகளைப் பார்ப்போம். பேச்சின்போது சில தவறுகள் தென்படாது. என்றாலும் எழுத்து வடிவில் அவை தவறுகள்ஆகலாம். அவற்றையும் பார்ப்போம்.

 

  • ஒருவரின் பெயரைக் கேட்பதற்கு முன்னால் உங்கள் பெயரைச் சொல்வதுதான் நாகரிகம். “My name is Karthik. May I know your name?” என்று கேட்கலாம்.

 

  • ஒன்பதாவது என்பதை Ninth என்றுதான் எழுத வேண்டும். Nineth என்பது தவறு.

 

  • I am eighth standard என்றால் ‘நான் எட்டாவது வகுப்பு’ என்றாகிவிடுகிறது. நீங்கள் எட்டாவது வகுப்பில் படிக்கிறீர்களே தவிர, நீங்களே எட்டாவது வகுப்பு இல்லையே! எனவே I am studying in eighth standard என்று கூறவேண்டும்.

 

  • தமிழில் ‘முகமெல்லாம் சிரிப்பு’ என்றும், ‘புன்னகை நிரம்பிய முகம்’ என்றும் கூறுவதுண்டு. ஆனால், ஆங்கிலத்தில் ‘‘You smile a lot” என்றோ “You are all smiles” என்றோ கூற வேண்டும்.

 

  • I have passed the examination என்று சொல்வதை ஏற்கலாம். ஆனால், passed out என்பதற்கான பொருளே வேறு. Passed outஎன்றால் மயங்கி விழுவது. Ramesh just passed out in the next room.

 

  • (ஒன்று, இரண்டு என்று) எண்ணக் கூடியவற்றை countable nouns என்போம். Chairs, tables, cars,
    chocolates ஆகியவை சில எடுத்துக்காட்டுகள். ‘‘அதிக எண்ணிக்கையில்’’ என்று குறிப்பிட இவற்றுக்கு முன் ‘many’ என்ற வார்த்தைதான் பயன்படுத்தப்பட வேண்டும். எண்ண முடியாத பொருள்கள் உண்டு. Water, air, liquid போன்றவை. இவற்றுக்கு முன்னால் ‘அதிக அளவில்’ என்பதைக் குறிக்க ‘much’ என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும்.

 

  • ஆக, please take as many chocolates as you want என்று இருக்க வேண்டும்.